• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ் தேர்தல் அறிவிப்பால் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள கவலையும் பதற்றமும்

பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், சில பிரிவினருக்கு பெரும் கலக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், வலது சாரியினர்.

பிரான்சில் இன்று வலதுசாரியினருக்கு இருக்கும் இதே ஆதரவு, நமது பெற்றோர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தபோது இருந்திருந்தால், நாமெல்லாம் பிரான்ஸ் குடிமக்களாக ஆகியிருக்கவே முடியாது என்கிறார் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை மற்றும் நகர மேம்பாட்டுச் செயலர் பொறுப்பு வகிக்கும் சப்ரினா (Sabrina Agresti-Roubache).

சப்ரினா, அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆவார்.

விடயம் என்னவென்றால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட, வலது சாரிக் கட்சியான, National Rally கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்றே கூறுகின்றன.  

ஆகவே, பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர், இஸ்லாமியர்கள் முதலானோர் கவலையிலும் பதற்றத்திலும் ஆழ்ந்துள்ளார்கள். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் சப்ரினாவின் வயதான தாயார், தேர்தல் அறிவிப்பைக் கேட்ட நாள் முதல் அழுதுகொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் சப்ரினா.

அவரே அப்படியானால், மற்றவர்கள் நிலை என்ன? சப்ரினா, Marseille நகரில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தபோது, அவர் சந்தித்த அந்நகர மக்களில் பலரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்கள். தேர்தல் துவங்கும் முன்பே, தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் கவலைப்படத் துவங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Leave a Reply