• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் அடையாள பணிநிறுத்தத்தில் ஈடுபடும் அரச சேவை பொறியியலாளர்கள்

இலங்கை

2027 வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அரச சேவை பொறியியலாளர்கள் இன்று (13.11.2026) ஒருநாள் அடையாள பணிநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

2012ஆம் ஆண்டு முதல் இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த களப் பணிக்கான வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு, 2024ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது.

குறித்த கொடுப்பனவை 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வழங்குவதாக அரசாங்கம் முன்னர் உறுதியளித்திருந்த போதிலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்று சுகயீன விடுமுறை அறிவித்து அடையாள பணி நிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும், இதனால் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.
 

Leave a Reply