• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கத் தடையை நீட்டிக்க அரசு திட்டம்

கனடா

Canada is proposing another extension of its foreign homebuyers ban: வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

வெளிநாட்டவர்கள், கனடாவில் வீடு வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க கனடா அரசு திட்டமிட்டுவருகிறது.

கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வந்தது. 

இந்நிலையில், கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த விடயத்தில், இரண்டு விதிவிலக்குகளும் கொடுக்கப்படலாம். 

ஒன்று, ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை வெளிநாட்டவர்கள் வாங்கமுடியாவிட்டாலும், புதிதாக கட்டப்படும் வீடுகளை அவர்கள் வாங்கலாம்.

இரண்டு, குறிப்பிட்ட சில அமெரிக்கர்களுக்கு, அதாவது, கனேடிய வம்சாவளியினரான அமெரிக்கர்களுக்கு இந்த தடை பொருந்தாது. 
 

Leave a Reply