ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டி செப்டம்பரில்
இலங்கை
இலங்கை கர்ப்பந்து சங்கம், ஜனாதிபதி தங்கக் கோப்பை கரப்பந்து போட்டியை செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இலங்கைவிடுதிகள்
போட்டிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
மாவட்ட அளவில் தொடங்கும் இப்போட்டியில், மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் 25 அணிகள் தேசிய நிலைக்குத் தகுதி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டியில், தெஹியோவிட்ட ரந்தரு விளையாட்டு கழகம் ஆடவர் சாம்பியன் பட்டத்தையும், மஹௌசேவ ரத்தனபால விளையாட்டு கழகம் மகளிர் சாம்பியன் பட்டத்தையும் வென்றன.






















