• Welcome to TamilsGuide
செய்திகள் 1

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விளக்கம்

இலங்கை

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இது தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

சமீபத்தில், அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு கமகே, சுனில் பியான்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன, கலகொடத்த ஞானசார தேரோ மற்றும் 11 பேர் உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. செய்திபத்திரிகை

இருப்பினும், இது தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த விஐபி பாதுகாப்பு குறித்து சிறப்பு பாதுகாப்பு பிரதி காவல்துறைத் தலைவர் (டி.ஐ.ஜி) காவல்துறைத் தலைவருக்கு (ஐ.ஜி) கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட குழுவிற்கு எந்த முக்கியப் பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என டிஐஜி தெரிவித்துள்ளார் என அமைச்சர் கூறினார்.
 

Leave a Reply