• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானின் உலகக் கிண்ணம் பயிற்சி மையத்திற்கு வெளியே... நடுங்க வைக்கும் சம்பவம்

மெக்சிகோவில் உள்ள ஈரானின் உலகக் கிண்ணம் பயிற்சி முகாமுக்கு எதிரே, கருப்பு நிறப் பையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவசரக் காவல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சிதைவடைந்த நிலையில்

திஜுவானாவில் உள்ள அந்த வளாகத்திற்கு நேர் எதிரே அமைந்திருந்த ஒரு சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த காரின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியவருவதற்கு முன்பே, அது அங்கு பல நாட்களாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திஜுவானாவில் உள்ள அரசு சட்டத்தரணி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகனத்தைப் பரிசோதித்தபோது, ​​வன்முறைக்குள்ளானதற்கான அறிகுறிகளுடன், கருப்பு நிறப் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு உடல் வாகனத்தின் பின்பகுதிக் கிடங்கில் (trunk) இருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2026 உலகக் கிண்ணம் போட்டிகளுக்கான தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கான தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, ஈரானிய ஆண்கள் கால்பந்து அணி கடந்த வாரம் திஜுவானாவில் தரையிறங்கியது.

ஈரானிய அணி முதலில் அரிசோனாவில் முகாமிடத் திட்டமிட்டிருந்தது, ஆனால் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் மெக்சிகோவிற்கு இடம்பெயர வேண்டியிருந்தது.

'ஜி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான், ஜூன் 16 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சியாட்டலில் நடக்கும் போட்டியில் எகிப்தை எதிர்கொள்ளும் ஈரானிய அணி, லாஸ் ஏஞ்சல்ஸில் பெல்ஜியத்துடனும் விளையாடுவார்கள்.
 

Leave a Reply