10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு- நயன்தாரா
சினிமா
10 ஆண்டுகள் கழித்து, சிம்பு மற்றும் நயன்தாரா மீண்டும் இணையும் புதிய படத்தில், சிம்பு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தாயராகி வருகின்றன. அதில் சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் ஒன்று. நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டமான பக்தி படமாக இப்படம் இருக்கும் என்பதை அப்படத்தின் டிரெய்லர் உறுதிப்படுத்தி உள்ளது.
இதனிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் 'தி வேர்ல்ட் ஆஃப் அரசன்' என்ற தலைப்பில் 7 நிமிடம் கொண்ட முன்னோட்ட காட்சிகள் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகாததால் முன்னோட்ட காட்சியை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு சிம்பு மற்றும் நயன்தாரா? மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'டூட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கீர்த்தீஸ்வரன் , தனது இரண்டாவது படத்திற்காக சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் மேலும் இப்படத்தில் சிம்பு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுகுறித்து படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வெளியாகி உள்ள தகவல்களின்படி, பண்டிராஜின் ' இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு அதாவது 10 ஆண்டுகள் கழித்து, சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் இணையும் படமாக இது அமையும். அதற்கு முன்பு, 2006-ல் வெளியான ' வல்லவன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும், 'ஒஸ்தி' படத்திற்குப் பிறகு, சிம்பு காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இரண்டாவது படமாகவும் இது அமையும் . சிம்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தீஸ்வரன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.























