• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இரத்த தானம் செய்த நபர் மறுநாள் மரணம்

கனடா

கனடாவில் பிளாஸ்மா தானம் செய்த மறுநாளே நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த உயிரிழப்பிற்கும் பிளாஸ்மா தானத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்று சுகாதார அதிகாரிகளும், கனேடிய இரத்த சேவைகள் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.

கனடிய சுகாதாரத் திணைக்களத்தின்  செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை உறுதிப்படுத்திய தகவலின்படி, செப்டம்பர் 25 அன்று இந்த உயிரிழப்பு குறித்து கனேடிய இரத்த சேவைகள் அமைப்பு மத்திய சுகாதார முகமைக்குத் தகவல் தெரிவித்தது.

சட்டப்படி, தானம் பெறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் ஏதேனும் உயிரிழப்பு நிகழ்ந்தால் அது குறித்து கனடிய சுகாதாரத் திணைக்களத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அமைப்பின் பிளாஸ்மா சேகரிப்பு நடைமுறைகள் "பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை" என்தை கனடிய சுகாதாரத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

தானமளிப்பவரின் தகுதியை மதிப்பீடு செய்வது உட்பட, உரிமையளிக்கப்பட்ட அனைத்து விதிகள் மற்றும் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சேகரிப்பின் போது உபகரணக் கோளாறுகள், தவறான பயன்பாடுகள் அல்லது நடைமுறை விலகல்கள் எதுவுமே நிகழவில்லை. நீண்ட காலமாக பிளாஸ்மா தானம் செய்துவந்த தன்னார்வலரின் மறைவுக்குக் கனேடிய இரத்த சேவைகள் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply