• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை

இலங்கை

ஹோமாகமை பொலிஸ் நிலைய அதிகாரிகளால்  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துசெய்திகள்
அந்த அறிக்கையில்,

2026.10.25 ஆம் திகதி ஹோமாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன சந்தியில் வைத்து, ஹோமாகமை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய, கிரிவத்துடுவ, மூனமலேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, சிகிச்சைக்காக ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகமை பொலிஸ் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிக்கையிடப்பட்டதைத் தொடர்ந்து, பதில் நீதவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் சடலம் தொடர்பான நீதவான் விசாரணையையும் மேற்கொண்டுள்ளார்.

சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை 2026.10.27 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள், ஹோமாகமை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஹோமாகமை மாவட்டம் (II) உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகமை  பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றிய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகிய இரு உப பொலிஸ் பரிசோதகர்களினதும், உபசேவைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினதும் சேவையை 2026.10.26 ஆம் திகதியான இன்று  இடைநிறுத்துவதற்கு ஹோமாகமை மாவட்டம் (I) பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

Leave a Reply