• Welcome to TamilsGuide
செய்திகள் 1

12 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்

சினிமா

Jailer 2 worldwide Collection: ஜெயிலர் 2 திரைப்படம் 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற சாதனையை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இதன் மூலம், 1999-ஆம் ஆண்டிற்கு பின் தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ என்கிற சாதனையை ரஜினி படைத்துள்ளார்.

உலகளவில் ஜெயிலர் 2 ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் விவரமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், 12 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 உலகளவில் 12 நாட்களில் ரூ. 725 கோடி வசூல் செய்துள்ளது.
 

Leave a Reply