மின்சாரப் பாவனையாளர்களின் கவனத்திற்கு — முக்கிய அறிவிப்பு
இலங்கை
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திப் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, பிரதான மின் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் அதன் தாக்கத்தால் நுரைச்சோலையில் உள்ள ஒரு மின்னாக்கியும் செயலிழந்தது
இன்னிலையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதால், மேலும் மின்வெட்டு தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






















