தென்கொரியாவில் விவாகரத்து கோரிய மனைவிக்கு ரூ.14,000 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
தென்கொரியா நாட்டில் தொழிலதிபரான குவோன் ஹியூக் பின், கடந்த 2002-ஆம் ஆண்டில் ஸ்மைல்கேட் என்ற வீடியோ கேம் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இந்த நிறுவனம் உலகளவில் மிகவும் வெற்றிகரமான கேமிங் நிறுவனங்களில் ஒன்றாக பிரபலமடைந்ததை தொடர்ந்து, இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 60,000 கோடியாக உயர்ந்தது.
வீடியோ கேம் அதிபரான குவோன், முதலில் ரோ என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி ரோ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தொழிலதிபரின் பங்குகளில் முதல் மனைவியான ரோவின் பங்கு மற்றும் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற ரோ-வுக்கு உரிமை உண்டு என்று சியோல் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து தொழிலதிபரின் முதல் மனைவி ரோவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாயை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தொழிலதிபர் திருமணம் செய்த இரண்டாம் மனைவியான லீ என்பவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது தான் நிறுவனத்தின் ஆரம்பகால நிர்வாகத்திற்கு மறைமுகமாக பங்களித்திருப்பதாக கூறி, கணவரின் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இதையடுத்து சியோல் நீதிமன்றம் தொழிலதிபரின் இரண்டாம் மனைவியான லீ என்பவருக்கு, ஸ்மைல்கேட் நிறுவனத்தின் ரூ.17,761 கோடி மதிப்புள்ள, 35 சதவீத பங்குகளை மாற்றி தரும்படி உத்தரவிட்டது.
மேலும் லீ-க்கு ரொக்கமாக 461 கோடி ரூபாய் வழங்கவும் சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






















