• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் பணிகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் உள்ளூர் அதிகாரிகளால் இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பிராந்திய அச்சுறுத்தல் நிலை தீவிரமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள UKMTO, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply