• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிப்பேரரசு தனியாக சோகப்பட்டதை இந்த சமூகமே சோகப்படச் செய்த குரல் பாடகா் ஜேசுதாஸின் குரல்.

சினிமா

இந்த பாடலை ஜேசுதாஸ் தவிர வேறு யாா் பாடினாலும் இவ்வளவு இனிமையும் இவ்வளவு சோகமும் கிடைத்திருக்குமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை?

.கவிப்பேரரசு தனியாக சோகப்பட்டதை இந்த சமூகமே சோகப்படச் செய்த குரல் பாடகா் ஜேசுதாஸின் குரல்.

கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே
இறக்கின்ற தேதி
இருக்கின்றது என்பது மெய்தானே

ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே

உடம்பு என்பது
உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது
பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி
போனது போக
எது மீதம்

பேதை மனிதனே
கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்.

வைரமுத்து
-- 

Leave a Reply