• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் - மிரட்டும் டிரம்ப்

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப் ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நான்கு மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனாலும் ஹார்மூஸ் நீரினை வழியாக வரும் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை துவங்கியிருக்கிறது.. எனவே மீண்டும் அங்கே போர் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க தாக்கியதில் ஈரானின் 30 பேர் இறந்துவிட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் ‘ஈரான் மீண்டும் எங்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவோம்.. அந்த நாட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார். மேலும் ‘நாளை இரவு ஈரானை கடுமையாக தாக்கப் போகிறோம்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்
 

Leave a Reply