• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு போதிக்கும் பாடசாலைகள்..

சினிமா

சூரியனைப் பார்த்து நாய்கள் குரைப்பதால் சூரியனுக்கு என்ன இழுக்கு நேர்ந்துவிடப் போகிறது?
அதே போல் இங்கு ஒரு சிலர் பொன்மனச் செம்மலின் மாண்பை குறைப்பதாக எண்ணிக் கொண்டு தங்களின் முகத்திலேயே எச்சில் துப்பிக் கொள்கிறார்கள் மல்லாந்து கிடந்து கொண்டு,
இவர்களைப் போன்ற சல்லிகளை மக்கள்திலகமும்  மதித்ததில்லை, நாமும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை,
கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை தலைவரிடம் கேட்டார் " உங்களை இவ்வளவு திட்டுகிறேன் ஆனால் கோபப்படுவதற்குப் பதிலாக சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே?
அதற்கு தலைவர் சொன்னார் " உங்கள் வார்த்தைகளை நான் மதித்தால்தானே கோபப்பட வேண்டும் 😄😄😄😄,
எப்படிப்பட்ட அடி? கவிஞர் வெட்கித் தலை குனிந்த தருணம் அது,
அதேபோல் இந்த சில்லறைகளின் வெற்றுக் கூச்சல்களை நாம் மதிக்கவில்லை என்றாலும் சிறிய விளக்கமாவது கொடுப்போம் என்ற உணர்வில்தான் இந்தப் பதிவு,
பெரிய அறிவுஜீவி ஒருத்தர் தலைவரை " சண்டை நடிகர் " என்று அழைத்து தன்னுடைய ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார்,
சரி என்னுடைய சிறிய பதில்தான் இது,
தலைவருடைய படங்களில் வரும் சண்டைக் காட்சிகளை இப்போதைய படங்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளுடன் ஒப்பிட்டு கடந்து போய் விட முடியுமா?

இன்றைய கால கட்டங்களில் சமூகத்தில் பெருகிக் கிடக்கும் குற்றங்களுக்கு இப்போதைய படங்களில் வரும் ரத்தவாடையுடன் கூடிய மோசமான வன்முறைக் காட்சிகளும் ஒரு காரணம்,
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள தற்காப்புக் கலை எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது,
அன்றைக்கு தலைவரின் படங்களில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் போரில் இறுதியில் தர்மம்தான் வெல்லும் என்ற வாழ்வியல் தத்துவத்தை மக்களுக்கு போதிக்கும் பாடசாலைகளாகத்தான் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது,
அன்றைக்கு பெரிய பெரிய ஆசான்கள் கூட தலைவரின் படங்களைப் பார்த்து கற்றுக் கொண்ட வித்தைகள் ஏராளம்,
ஜாக்குவார் தங்கம், சூப்பர் சுப்பராயன் போன்ற சண்டைப்பயிற்சி மாஸ்டர்கள் இப்போதும் வியந்து போய் சொல்லும் தலைவரின் சண்டைக் காட்சிகள் ஏராளம்,
சிலம்பம், மான்கொம்பு, குத்துச்சண்டை, மல்யுத்தம், இரட்டை வாள் வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு என்று படத்துக்குப் படம் தலைவர் சண்டைக்காட்சிகளில் காட்டிய சாகசங்கள் எப்போதும் நம் கண்ணிலேயே நிற்கும்,
அனைவருக்கும் தற்காப்புக் கலை எவ்வளவு அவசியம் என்பதை இப்போது வந்திருக்கும் " பிளாஸ்ட் " படத்தில் காட்டியிருப்பார்கள்,
அதில் வரும் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்,
ஆனால் பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியமான ஒன்று என்பதை அன்றே தலைவர் " பெரிய இடத்துப் பெண், மலைக் கள்ளன், முகராசி போன்ற படங்களில் மணிமாலா, ஜோதி லட்சுமி, சாய் சகோதரிகள் மூலம் செய்து காட்டி விட்டார்,
இன்றைக்கு பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும் முறையை அப்போதே படங்களில் தலைவர் முன்னெடுத்தார்,
வன்முறைக்கு இடம் கொடாமல் எதிரியையும் திருத்தி மன்னிக்கும் மனப்பான்மையை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து பாடம் எடுத்த " வாத்தியார் ",
அவர் கைகளில் சிலம்பம் வீசும் அழகையும், வலது கையிலும், இடது கையிலும் மாற்றி மாற்றி வாள் வீசும் லாவகத்தையும் நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே,
பெரிய இடத்துப் பெண், அன்னமிட்ட கை, தாயைக் காத்த தனயன், படகோட்டி, தாலி பாக்கியம் இன்னும் எவ்வளவோ படங்களில் அவர் வீசிய சிலம்பத்தின் ரீங்காரம் இப்போதும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்குமே,
ரிக் ஷாவையும் ஓட்டிக் கொண்டே சிலம்பத்தையும் சுற்றிக் கொண்டு கதாநாயகிக்கும் அடிபடாமல் சண்டையிடும் வெறித்தனமான திறமை உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனை,
மேல்நாட்டின் " எரால் பிளைன் " கூட இவ்வளவு அசாத்தியமாக ஸ்டைலாக வாள் வீசுவாரா என்றால் இல்லை,
பதக்கத்தை நம்பியாரிடமிருந்து பறித்து வாளை சுண்டி விடும் அழகை " அரச கட்டளையில் " மறந்துவிட முடியுமா?
கொஞ்சம் பொறு பூங்கொடி விளையாடிவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி மின்னல் பறக்க வாள் வீசும் மணிமாறனை இப் பூவுலகம் உள்ளவரை மறக்கத்தான் முடியுமா?
சுருள் கத்தியை மேசையில் முழங்காலிட்டு இடிமுழக்கமிடும் செல்வத்தை மறந்து விட முடியுமா?
இன்னும் ஆயிரம் கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம்,
கணேசன் ரசிகர்களைப் பொறுத்த வரையில் " ஸ்டண்ட் சோமு " தலையில் அடித்துக் கொண்டது மாதிரி கையில் வாளை பிடித்துக் கொண்டே ரெண்டு காலையும் தரையில் தவ்வித் தவ்வி மிதித்துக் கொண்டே பூமிமாதா அய்யோ என்னை விட்டுடுப்பா என்று அலறும் அளவுக்கு " உத்தம புத்திரனில் " போடும் சண்டைக் காட்சிதான் 😄😄😄😄😄😄😄😄😄😄😄உண்மையான சண்டை போல?,
எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது போல சண்டைக்காட்சி என்னும் பெயரில் சிவாஜி காலால் புல் வெட்டுவார் என்று சொன்னதை இப்போது நினைத்தாலும் குபுக் என்று சிரிப்பு வருகிறது 😄😄😄😄😄😄😄😄😄,
இதைவிட ஒருபடி மேலேபோய் டாக்டர் ருத்ரன் அவர்கள் சொன்னது மரணக் காமெடி,
" சிவாஜி சண்டை போடும் போது குளிர் ஜுரம் வந்தது மாதிரி உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டே இருக்கும், அதைப் பார்க்கும் நமக்கு அய்யோ சாமி விட்ருங்கப்பான்னு கத்தணும் போல இருக்கும்னு சொன்னது மரண மாஸ் 😄😄😄😄😄😄😄😄,
" தங்கப் பதக்கம் " படத்தில் போலீஸ் லத்தியை வைத்துக் கொண்டு சிவாஜி போடும் சண்டையை???? விட வடாம் காயவைக்கும் நம்மூர் பெண்கள் நன்றாக காக்கா ஓட்டுவார்கள் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄,
சண்டைக்கலை என்பது எவ்வளவு பெரிய கலை என்பதை உணராமல் உளறிக் கொண்டிருக்கும் இது போன்ற மண்டூகங்களை என்ன சொல்ல?,
அடுத்த பதிவில் 1960 ல் கொய்னா?? அணை உடைஞ்சதுக்கு கணேசன் கொடுத்த வருமான வரித்துறைக்கு மட்டுமே தெரிந்த 11 லட்ச ரூபாய் பாதாள ரகசியம் வெளிவந்திருக்கிறது 😄😄😄😄😄😄😄 அந்த ரகசியத்தின் பின்னணி குறித்து அலசுவோம் சரியா 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄,
ஜே. ஜேம்ஸ்வாட்,
குமரிக் கடற்கரை!(Thanks to mr. J. JamesWatt)....

 


 

Leave a Reply