• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு

இலங்கை

இறக்குவனை, ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78 ஆவது போசோன் ஊர்வலத்திற்காகக் கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில், பாகன் ஒருவரும் அவரது உதவியாளரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய ஊர்வலத்தைத் தொடர்ந்து, இரண்டு யானைகள் ஆலயத்துக்கு அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை, பாகனின் உதவியாளர் ஒரு யானைக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அதை இறக்குவானை ஆற்றுக்கு அழைத்துச் சென்றபோது, ​​அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்து அவரைத் தாக்கியதில் உதவியாளர் உயிரிழந்தார்.

அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்ற பாகன், யானையால் தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், அந்த யானை அருகிலுள்ள நெல் வயலுக்குள் ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், மயக்க மருந்து செலுத்தி அந்த விலங்கைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 

Leave a Reply