• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லதை நாடு கேட்கும் (1991)

சினிமா

#எம்ஜிஆர் நடித்து தமிழக முதல்வரான பிறகு கிடப்பில் போட்டபட்ட படத்தின் காட்சிகள் என்னும் ரியல் ரம்மியை வைத்து இருக்கும் சீட்டுகளை எல்லாம் சேர்த்து டிக்' அடிக்க முயற்சித்த படம்தான் நல்லதை நாடு கேட்கும் .
“அண்ணன் சொல்லுறத கேட்டு நடந்துக்கிட்டாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்.. என்ற மெல்லிய எம்.ஜி.ஆர். பாணியில் பன்ச் டைலாக்குடன் படத்தில் ஹீரோவாக எம்ஜிஆர் அவர்களுக்கு தம்பியாக நடித்து இருக்கிறார் , ஜேப்பியார் . எம்ஜிஆர் நடித்த கடைசி படம் என்ற விளம்பரம் வந்தது . படத்தின் இயக்குனர் கர்ணன் அவர்களாக இருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் ஜேப்பியார் என்றே டைட்டிலில் காண்பித்தனர்.
சி.வி.ஸ்ரீதர் 1977ல் அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தை தொடங்கி 4,000 அடிகள் காட்சிகள் எடுத்து கிடப்பில் போடப்பட்ட அப்படத்தை பார்த்த கே.பாக்யராஜ், முறையான அனுமதி பெற்று அவசர போலீஸ் 100 என்று எடுத்ததை போல எம்ஜிஆர் ரெண்டு மூன்று நாட்கள் மட்டுமே நடித்த படத்தின் காட்சிகளுக்கு திரைக்கதை அமைத்து வெளியிடப்பட்டது தான் 'நல்லதை நாடு கேட்கும் . படத்தின் ஜீவ நாடியே அதில் நடித்த தலைவருக்கு பிறகு பத்மப்ரியா தான். 
எடுக்கப்பட்ட காட்சிகளில் நடித்த முக்கியமான மூன்றே பேரில் இந்த படம் எடுக்கும்போது உயிருடன் இருந்தது பத்மப்ரியா மட்டுமே . பத்மப்ரியாவை மையமாக வைத்து தான் இந்த படக்காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் . இதில் இயக்குனர் சாமர்த்தியம் அத்தியாவசியமானது .
எம்ஜிஆர் அவர்கள் படத்தின் காட்சிக்கு வர வேண்டுமென்றால் பத்மப்ரியா கனவு கண்டே ஆகவேண்டும் . ஆகவே கட்டில், போன் , வீடு என்று சீன் ப்ராப்பர்டி எதை பார்த்தாலும் அவருக்கு ஜீவா( எம் ஜி ஆர்) ஞாபகம் வரவேண்டும் .ஆகவே பத்மப்ரியா கனவு கண்டு தலைவரை வரவைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விடுகிறார் .இந்த வகையில் இயக்குனரை மெச்சிக் கொள்ளலாம்.
உண்மையிலேயே நாம் பார்த்திராத எம்ஜிஆர் - பத்மப்ரியா காட்சிகள் பார்க்கும்போது ஒரு பரவசம் வருவதை ரசிகர்கள் உணர்கிறார்கள் .அந்த அழகிய இளமையான பத்மப்ரியா பிறகு கொஞ்சம் மத்திய வயது பத்மப்ரியாவாக வந்தாலும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை . க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும் ஆறு வித்தியாசங்கள் காணலாம் .
எஸ் வீ சுப்பையா பத்மப்ரியா அப்பாவாக போலீஸ் அதிகாரியாக அதுவும் தன் மகள் வீட்டில் ஒளித்து வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் குற்றவாளி (ஜீவா)

 எம் ஜி ஆரை ஊரெங்கும் தேடுகிறார் .
ரேகாதான் ஜேப்பியார் அவர்களுக்கு ஜோடி தீபனுக்கு கவுதமி ஜோடி . பத்மப்ரியா எம்ஜிஆருக்கு ஜோடி என்று படத்தை முடிக்கிறார்கள் . ஆனால் இந்த படத்தை இவரால் கே பாக்கியராஜ் அளவு வெற்றிபெற்ற வைக்க இயலவில்லை என்றால் அவருக்கு கிடைத்த காட்சிகள் அந்த அளவுதான் .அவர் என்ன செய்வார் , பாவம்  !
ஒரே ஒரு பத்மப்ரியா - எம்ஜிஆர் காதல் பாடல் காட்சி இருந்திருந்தால் கூட நல்லா இருந்திருக்கும் .சோக மூடில் கூட பத்மப்ரியா எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் தனிப்பாடல் காட்சிகளை தான் நினைத்து பார்க்கிறார் . இசை சங்கர் கணேஷ். 
இது தவிர ஜேப்பியார் ஆரம்பத்தில் யாரென்று தெரியாமல் அண்ணி பத்மப்ரியாவை வில்லன்களிடம் காப்பாற்றி விடுகிறார் .பிறகு ரேகாவை காப்பற்றுகிறார் .கௌதமியை காப்பாற்றுகிறார். ஆனால் இதில் எதுவும் இந்த படத்தை காப்பாற்றவில்லை 
.துணிந்து நடித்து நடிக்க ரொம்ப மெனக்கெட்டு செய்த அவரின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஒரு சல்யூட் .எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளுக்குள் அவருக்கு இருந்ததிருக்கிறது . அதற்கான நேரமும் அப்போது வந்தது. இந்தப் படம் வெளிவந்தபோது முதல்வர் எம்ஜிஆர் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் .
"எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல.  நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன் தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன்.” என்று அவர் கழக மேடையில் முழங்கியதை இந்த படத்தை எடுத்து உறுதிப்படுத்தியதை பாராட்டியே ஆகவேண்டும் .
அந்தப்படத்தில்,தனக்கு ஜோடியாக நடித்த ரேகாவிடம் பேசுவார் ஜேப்பியார். “லட்சியத்துக்காக என் உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்துக் கிட்டிருக்கிறவன் நான்.” என்று தன்னை ஒரு லட்சிய புருஷனாக படத்தில் காட்டவும் அவர் தவறவில்லை.
ஆனாலும் "நல்லதை நாடு கேட்கும், "
படம் ரசிகர்கள் கேட்பாரற்று கிடந்தது என்பதை யார் கேட்டாலும் சொல்லலாம்.

 

ஆறுமுகம் சிக்ஸ் ஃபேஸ் 

Leave a Reply