முடிவுக்கு வந்த தனம் சீரியல்.. கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு தொடங்கிய சீரியல் தனம். சற்று மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இந்த சீரியலில் நடிகை சத்யா தேவராஜன் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் இதற்கு முன் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கிறார்.
பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த வாரம் மே 16ஆம் தேதி தனம் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பானது.
ரசிகர்கள் பலரும் தாங்கள் தனம் சீரியலை மிஸ் பண்ணுவதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தனம் சீரியல் கதாநாயகி சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






















