• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ள அதிரடி குற்றச்சாட்டு

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (44), மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதாக கலிபோர்னியா மாகாணத்தில் அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் வெஞ்சுரா கவுண்டி பகுதியில் தனது பிஎம்டபிள்யூ (BMW) காரை அதிவேகமாகவும், மோசமாகவும் ஓட்டியதற்காக பிரிட்னி ஸ்பியர்ஸை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர் போதையில் இருப்பது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மது மற்றும் குறைந்தபட்சம் ஒரு வகை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்னி ஸ்பியர்ஸ் சுயமாகவே போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. இது ஒரு சிறிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர் நேரில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை.

பிரிட்னி ஸ்பியர்ஸ் இதற்கு முன்பு இது போன்ற குற்றங்களில் ஈடுபடாததாலும், விபத்து ஏதும் ஏற்படாததாலும் அவருக்கு “வெட் ரெக்லெஸ்” (Wet Reckless) எனப்படும் ஒரு சலுகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டால், ஒரு வருடம் நன்னடத்தை கண்காணிப்பு, அபராதம் மற்றும் போதை ஒழிப்பு வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். பிரிட்னியின் இந்தச் செயல் மன்னிக்க முடியாதது. இருப்பினும், அவர் தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த எடுத்துள்ள முதல் படியாக இதைப் பார்க்கிறோம்" என அவரது தரப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply