• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் தனது பெயரில் 18 அடையாள அட்டைகள் வைத்திருந்த பெண்

கனடா

கனடாவின் சூ செயின்ட் மேரி (Sault Ste. Marie) பகுதியில், தனது பெயரில் இல்லாத 18 அடையாள அட்டைகள் மற்றும் 6 வங்கி அட்டைகளை வைத்திருந்த 34 வயது பெண் ஒருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி காலை ஈஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண், முன்னதாகப் பெற்றிருந்த பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறி போலீஸாரால் நிறுத்தப்பட்டார்.

அப்போது அவரைச் சோதனையிட்டபோது, அவரிடம் மற்றவர்களின் பெயரிலான அடையாள அட்டைகளும் வங்கி அட்டைகளும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மற்றவர்களின் அடையாள ஆவணங்களை வைத்திருந்தது, பிறருடைய கடன் அட்டைகளை (Credit cards) வைத்திருந்தது மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், வரும் ஜூலை 20-ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஏப்ரல் 30 அன்று காவல்துறை அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. 
 

Leave a Reply