• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை

இன்றைய தினம் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் 398 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 455 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply