ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய படகுகளை சுட்டு வீழ்த்துங்கள்- டிரம்ப் உத்தரவு
ஈரானிய கடற்பகுதியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படையினர், அதை மீறி செல்லும் அந்த நாட்டு கப்பல்களை தாக்கி சிறைப்பிடித்து வருகின்றனர். அதேநேரம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், அதை மீறும் கப்பல்களை தாக்கி வருகிறது.
இதற்காக படகுகளை பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையில் வரும் ஈரான் படகுகளை தாக்கி அழிக்குமாறு அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் நேற்று உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,"ஹார்முஸ் நீரிணையில் படகுகளை, அது சிறிதாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவை ஹார்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகளை பதித்து வருகின்றன" என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர்,"எந்தத் தயக்கத்துக்கும் இடமில்லை. மேலும், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தற்போது நீரிணையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. அந்தப் பணியை 3 மடங்கு வேகத்தில் தொடருமாறும் இதன்மூலம் நான் உத்தரவிடுகிறேன்" என்றும் கூறியுள்ளார்.






















