• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து

இலங்கை

டென்மார்க்கில் வியாழக்கிழமை (22) இரண்டு உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், குறைந்தது 17 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவசர சேவைத் துறை தெரிவித்துள்ளது.

விபத்தினைத் தொடர்ந்து இரண்டு ரயில்களில் இருந்த அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக டென்மார்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் கோபன்ஹேகனுக்கு வடக்கே, ஹில்லரோட் மற்றும் காகெருப் நகரங்களை இணைக்கும் ஒரு ரயில் பாதையில் நிகழ்ந்துள்ளது.

தனது பாதுகாப்பு சாதனையில் பெருமை கொள்ளும் டென்மார்க்கில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு ரயில் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ரயில் கடக்கும் இடத்தில் விரைவு ரயில் ஒன்று விவசாய லொறி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 27 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply