வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்
இலங்கை
வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம், தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அதில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கமுற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியது .
விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்த முதிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியை செலுத்தியசாரதி கவலைக்கிடமான நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த ராசலிங்கம் தவமணி வயது 75 என்ற முதிய பெண்ணே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






















