• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து – இருவர் கைது .

இலங்கை

நுவரெலியா கிரகரி வாவியில் நேற்று,  இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உயிராபத்து எதுவும் இன்றி பாதுகாக்க சிறுசிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,  குறித்த இரு படகுகளை இயக்கிய சாரதிகளை நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் இன்று (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply