• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்

இலங்கை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை (20) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்திய துணை ஜனாதிபதியை இதன்போது அன்புடன் வரவேற்றார்.

இந்தப் பயணம், இலங்கைக்கான அவரது இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாகும்.

ஞாயிற்றுக்கிழமை (19), துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

Leave a Reply