முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது
இலங்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி (Chandana Kathriarachchi) கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை (16) பிலியந்தலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு தொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரிடமிருந்து இரண்டு டி-56 ரக மெகசின்கள், 221 தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.























