• Welcome to TamilsGuide
செய்திகள் 1

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

தமிழ்நாடு

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் பாதாள அறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை 12 ஆண்​டு​களுக்கு பிறகு மார்ச் 1-ம் திகதி முதல் 10 நாட்​களுக்கு பக்​தர்​கள் தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

கும்​பகோணம் பிரம்​மன் கோயில் தெரு​வில் உள்ள வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் மூல​வர் சந்​நி​திக்கு கிழக்​கில் உள்ள பாதாள அறை​யில் அத்தி மரத்​தாலான, சுமார் ஒன்​றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சிலை 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை வெளி​யில் எடுக்​கப்​பட்​டு, பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டு, மீண்​டும் பாதாள அறைக்கு கொண்டு செல்​லப்​படும்.

1915-ம் ஆண்​டுக்​குப் பின் பல்​வேறு காரணங்​களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்​கப்​ப​ட​வில்​லை. 98 ஆண்​டு​களுக்கு பிறகு 2013-ம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்​கப்​பட்​டு, பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது. பின்​னர் அந்த சிலை மீண்​டும் பாதாள அறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டது.

இந்​தநிலை​யில், 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு, ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை மார்ச் 1-ம் திகதி வெளி​யில் எடுக்​கப்​பட்​டு, சிறப்பு பூஜைகளுக்​குப் பின்​னர் பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக வைக்​கப்பட உள்​ளது. தொடர்ந்​து, மார்ச் 10-ம் திகதி வரை இந்த சிலையை பக்​தர்​கள் தரிசனம் செய்​ய​லாம்.

அப்​போது ஆகம விதி​களின்​படி காலை 8 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை தைலக்​காப்​பு, புஷ்ப சேவை, ஊஞ்​சல் சேவை​களை பக்​தர்​களே செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்து சமய அறநிலை​யத் துறை அதிகாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​

Leave a Reply