நியூயோர்க் வங்கியில் ஒலித்த எச்சரிக்கை மணி - மானை கண்டு திகைத்த பொலிஸார்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மூடப்பட்டிருந்த வங்கி ஒன்றுக்குள் மான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வங்கி ஒன்றிற்குள் கடந்த வங்கி விடுமுறை (18) தினமொன்றில் இந்த மான் புகுந்துள்ளது.
அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மான் அதற்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்கி கட்டிடத்திற்குள் மான பதற்றத்துடன் நடந்துகொண்ட விதம் கெமராக்களில் பதிவாகியிருந்தது.
மூடப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அத்துமீறிய நடமாட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, அவ்விடத்தில் உள்ள அவசர எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
இதன் காரணமாக பின்னர் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வருகை தந்தனர். அங்கு பொலிஸார் அந்த விலங்கை அவதானித்த பின்னர், அதனை அங்கிருந்து வெளியேற்றி விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் மானை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பொலிஸார் கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக கூறப்படுவதுடன், அது குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.






















