• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தன்னை கொல்ல முயன்ற கோட்டாபய! சிறீதரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

இலங்கை

2011 ஆம் ஆண்டு தனது இராணுவ குழுவை வைத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(23.01.2025) கருத்து தெரிவித்த சி.சிறீதரன், நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த பிரேரணைக்கு பதில் வழங்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த சம்பவத்தில் நான் நூலிழையில் உயிர் தப்பியிருந்தேன்.

அதேபோல 2013 ஆம் ஆண்டு எனது காரியாளயத்துக்குள் குண்டுகள் கொண்டுவந்து வைக்கப்பட்டு, இராணுவ ஒட்டுக்குழுவாக இருந்த முன்னாள் எம்.பி சந்திரகுமார், உள்ளிட்டோர் அப்போது தவிசாளராக இருந்த வேழமாதிலனை கைது செய்து 13 மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர். யார் இததைப்பற்றி கதைத்தார்கள்?

அதே ஆண்டு மே மாதம் அளவில் கிட்டத்தட்ட 500 பேர் வருகைத்தந்து எமது அலுவலகத்தை தாக்கினார்கள்.

அப்போது ஏன் தயாசிறி, சாமர சம்பத், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் கதைக்கவில்லை.

ஏன் இவர்கள் தற்போது சிறீதரனை(தன்னை) இலக்குவைத்துள்ளனர். ஏதோ ஒருவகையில் தன்னை அரசியலில் இருந்து அனுப்புவதே இவர்களின் இலக்காக உள்ளது” என்றார்.

Leave a Reply