• Welcome to TamilsGuide
செய்திகள் 1

45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண் நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்டர் எம்.கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார்.

நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர் "இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை," என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டை பரிசாகவும் வழங்கினார்.

"இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மிகுந்த நேர்மையும், உண்மையும் தேவை. இவ்வளவு உயர்ந்த பண்புகள் கொண்ட ஒருவரை வீட்டிற்கு அழைத்து சந்தித்தது, எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமையாக உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பதிவு உரிமையாளர் : chennai footprints

Leave a Reply