ஈரானின் வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது
ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு நேற்று (14) இரவு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.






















