ஜேர்மனியில் இடம்பெற்ற மிகப்பெரிய வங்கி கொள்ளை - அதிர்ச்சியில் பொலிஸார்
ஜேர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நகரமான கெல்சென்கிர்சனில் நடந்த கொள்ளையில், திருடர்கள் 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளை உடைத்ததாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் கொள்ளையிட்ட குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்து நூற்றுக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கிளைக்கு வெளியே தகவல் கோரி திரண்ட நிலையில் பாதுகாப்பு படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.























