சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
இலங்கை
ஹெட்டிபொலவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) மதியம் போவத்த – வீரபோகுன பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சாரம் தாக்கிய நபர், வீரபோகுன ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதன்போது அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குலியாப்பிட்டியவில் உள்ள ஹெட்டிபோல பிராந்திய சேவை மையத்தில் பணியாற்றும் 41 வயது ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.





















