வா வாத்தியார் படத்தின் 3-வது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியானது
சினிமா
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் 3-வது சிங்கிள் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதலாளி என்ற தலைப்பிள் வெளியாகி உள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
























