BYD தொடர்பான இலங்கை நீதிமன்ற வழக்கு- புதிய அப்டேட்
இலங்கை
இலங்கை சுங்கத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட BYD வாகனங்களின் மோட்டார் திறன் குறித்த சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களுக்குள் கிடைக்கும் என்று சட்டமா அதிபர் நேற்று (15) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
வாகனங்களை தடுத்து நிறுவத்துவதற்கு எதிராக BYD மின்சார வாகனங்களுக்கான உள்ளூர் விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (JKCG) நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனு, நீதிபதிகள் ரோஹித அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வழங்கினார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசு பகுப்பாய்வாளர் துறை பிரதிநிதி மற்றும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் அதிகாரி ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு, BYD வாகனங்களின் மோட்டார் திறன் 100 kW அல்லது 150 kW என்பதை தீர்மானிக்கும் பணியை மேற்கொள்கிறது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அறிக்கை சில வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மேலதிக விசாரணையை செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.






















