பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு
இலங்கை
பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இலங்கை பொலிஸ் துறையின் 84ஆவது பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் , இனி பொலிஸ் துறைக்கு அரசாங்கத்தினால் எந்த அழுத்தமும் வழங்கப்படாது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன்“பொதுமக்களுடன் பணிபுரியும் பொலிஸ் சேவைக்கு ஒழுக்கம், ஆளுமை மற்றும் நியாயமான செயற்பாடு அவசியம் எனவும், சட்டத்தின் ஆதிக்கம் நடைமுறையில் அமைய பொலிஸ் துறையின் சுயாதீனமான செயற்பாடே முக்கியமானது,” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் தலையீடுகள் காரணமாக முன்னர் பல பொலிஸ் அதிகாரிகள் உரிய அங்கீகாரம் இன்றி பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் எந்தவித செல்வாக்கும் செலுத்தாது எனவும் அவர் உறுதியளித்தார்.
“பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்பு ரீதியிலான, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே தமது குறிக்கோள்,” எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















