• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் பட்டாசு ஏற்றிவந்த வாகனம் தீக்கிரை

இலங்கை

வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

திருவிழாவில் வெடிக்கொளுத்துவதற்காக பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்தபோது வாகனம் தீப்பிடித்து, அதிலிருந்த பட்டாசுகளும் வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்களும் ஆலயத்தில் இருந்த மக்களும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும், வாகனத்தின் பின்பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply