• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு

இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களம் BYD இறக்குமதிகளை மாத்திரம் தடுத்து நிறுத்துவதன் மூலமும் ஏனைய பிராண்டுகளின் மின்சார வாகனங்களை அனுமதிப்பதன் மூலமும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக BYD மின்சார வாகனங்களுக்கான உள்ளூர் விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (JKCG) நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள நிறுவனம்,

சுங்கத்துறை ஏனைய மின்சார வாகனங்களை சுயாதீன சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், நீதிமன்றம் முன்பு இதேபோன்ற மொடல்களை வங்கி உத்தரவாதத்தின் கீழ் வெளியிட உத்தரவிட்ட போதிலும், BYD ஏற்றுமதிகளைத் தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளரான BYD வழங்கிய ஆதாரங்களையும் சுங்கத்துறை புறக்கணித்ததாக JKCG குற்றம் சாட்டியது.

மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் மின்சார வாகன செயல்திறனை மேம்படுத்துவது குறித்த கூற்றுக்கள் “தொழில்நுட்ப ரீதியாக தவறானவை” என்று நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியது.

மேலும் BYD இன் செயல்திறன் தரநிலைகள் ஏற்கனவே உலகளவில் சான்றளிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது.

வாகனங்களை சரியான நேரத்தில் அனுமதிப்பதை உறுதி செய்வதற்கும், இலங்கையர்களுக்கு “மிக உயர்ந்த தரமான புதிய ஆற்றல் வாகனங்கள்” கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை JKCG மீண்டும் வலியுறுத்தியது.
 

Leave a Reply