தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு
இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
மத்தளயில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றின், டயர்களில் ஒன்று திடீரென வெடித்ததால், குறித்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் 175 ஆவது கிலோ மீட்டர் கம்பத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது வேனில் ஆறு பேர் இருந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த இரண்டு பெண்களும் 72 மற்றும் 44 வயதுடையவர்கள் ஆவர்.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற துயரமான சம்பவங்களை தடுக்க, வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.






















