ஜி.வி பிரகாஷ் நடித்த அடங்காதே படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
சினிமா
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது 'அடங்காதே' திரைப்படம்.
'அடங்காதே' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள 'அடங்காதே' படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாக வேண்டியது சில சூழ்நிலைக்காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் திரைப்படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவர இருக்கிறது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.





















