விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு
இலங்கை
கடுவெல வெலிவிட்ட பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல சட்டவிரோத சிகரெட்டுகள், ஏழு போதை மாத்திரைகள் மற்றும் சில பொருட்களும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























