சிரிக்கவும்,சிந்திக்கவும், பாராட்டவும் வைத்த படைப்பு மாரீசன் - கமல்ஹாசன்
சினிமா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் "மாரீசன் படத்தைப் பார்த்தேன் - இது நகைச்சுவைக்கும் மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம், என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது இந்த படைப்பு. இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக அவர்களை வாழ்த்த குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன்.
பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு புதுமையான, உற்சாகமான சினிமா. மாரீசன்" என கூறியுள்ளார்.






















