பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா
சினிமா
ஹரி ஹர வீரமல்லு படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் அடுத்ததாக உஸ்தாட் பகத் சிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். படத்தில் ஸ்ரீலீலா மற்றும் கே.எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் ஷ்லோகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் கையில் கேமராவுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, திரைப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார்.























