பரோட்டாவில் பொங்கல்- விஜய் சேதுபதியை பாராட்டி தள்ளிய நித்யா மேனன்
சினிமா
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
ஒரு நேர்காணலில் நித்யாமேனன் கூறியதாவது: விஜய் சேதுபதி பல விதமான பரோட்டாக்களை செய்து கொடுத்துள்ளார். வித்தியாசமான சாக்லேட் பரோட்டா, பைன் ஆப்பிள் பரோட்டா, வாட்டர்மெலான் பரோட்டா, பரோட்டா பொங்கல் என செய்வார். அதுவும் அவர் செய்த ஆம்லேட் அட்டகாசம் என நித்யா மேனன் கூறியுள்ளார்.
திரைப்படம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு சண்டை, விவாகரத்து, நட்பு, புரிதல் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளது.






















