18 மாதங்களின் பின் மீண்டும் உப்பு உற்பத்தியை ஆரம்பித்த லங்கா சோல்ட்
இலங்கை
பாதகமான வானிலை காரணமாக 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தியை லங்கா சோல்ட் லிமிடெட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது என்று அதன் தலைவர் டி. நந்தன திலக அறிவித்தார்.
அதன்படி, பூந்தல உப்பளத்தில் இன்று (21) காலை உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கியதாகவும், 40,000 மெட்ரிக் தென் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹாலேவய உப்பளத்தில் உற்பத்தி நடவடிக்கை நாளை (22) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு நிறுவனம் ஆரம்பத்தில் 100,000 மெட்ரிக் தென் உப்பு உற்பத்தியை இலக்காகக் கொண்டிருந்தது.
எனினும், பாதகமான வானிலை காரணமாக சுமார் 40,000 மெட்ரிக் தொன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.
இதனால், கடந்த மாதங்களில் நாட்டில் கடும் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், உப்பின் விலை அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.





















