டிரம்புடன் கருத்து மோதல் - தொலைபேசி எண்ணை மாற்றிய மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அரச செலவினங்களைக் குறைக்கும் மசோதா தொடர்பாக எலான் மஸ்க்குக்கு குறுஞ்செய்தி அனுப்ப முயன்ற போது அவரது எண் மாற்றப்பட்டது தெரிய வந்ததாகத் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் – மஸ்க் இடையே பிரச்னை விரைவில் சரியாகும் என்றும், ட்ரம்ப்பும் அதை எதிர்நோக்கி உள்ளதாகவும் மைக் ஜான்சன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























