• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இது என்னுடைய கடமை - நா.முத்துகுமார் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நெகிழ்ச்சி செயல்

சினிமா

தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.

அண்மையில் இவரது 50-வது பிறந்தநாள் வந்தது. கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடந்தது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா, சிவகார்த்திகேயன், முத்துக்குமாருடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது " நான் முதன் முதலில் நெல்சன் அண்ணா படத்தில் பாடல் எழுதிய போது அதற்கான சம்பளத்தை நான் நா. முத்துகுமார் சாருடைய குடும்பத்திற்கு கொடுத்தேன். இது நான் செய்த உதவி அல்ல, நான் செய்ய வேண்டிய கடமை. இன்றும் நான் பாடல் எழுத போகும்போது அவருடைய 2 பாடல்கள் கேட்டுவிட்டு தான் எழுத செல்வேன். இன்று பல நல்ல பாடலாசிரியர்கள் இருந்தாலும் முத்துகுமார் சாரை போல் எழுத ஆளில்லை" என கூறினார்.
 

Leave a Reply