• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இலங்கை

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த முகமூடி அணிந்த நான்கு பேர் குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 43 வயதானவர் என்பதுடன், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, கொலை இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் இதுவரை கைது செய்யப்படாத, நிலையில் வத்தளை பொலிஸாரும், களனி பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply